35 பெர்சன்ட் (சர்வதேச ஈரநிலங்கள் அமைப்பின் மூலம் நியமிக்கப்பட்ட) என்ற ஒரு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு மதிப்பீடு ஆனது, 15வது பங்குதாரர்கள் மாநாட்டிற்குப் பிறகு (COP15) சமர்ப்பிக்கப்பட்ட NBSAP என்ற திட்டத்தில் ஈரநிலங்களின் பங்கை எடுத்துக் காட்டுகிறது.
குன்மிங்-மாண்ட்ரீல் உலகளாவிய பல்லுயிர்ப்பெருக்க கட்டமைப்பிற்கு (KMGBF) நன்கு இணங்க உறுப்பினர் நாடுகள் தங்கள் NBSAP திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளன.
KMGBF ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் பல்லுயிர்ப் பெருக்க இழப்பை நிறுத்தவும் அதனை மீட்டெடுப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டில் உலகெங்கிலும் உள்ள 24 NBSAP திட்டங்கள் அடங்கும் என்பதோடு இது பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான உடன்படிக்கையின் உறுப்பினர்களாக உள்ள 196 நாடுகளில் 12 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
பெரும்பாலான மறுபரிசீலனைச் சமர்ப்பிப்புகள் ஆனது ஐரோப்பாவிலிருந்தும் (10), அதைத் தொடர்ந்து ஆசியா (7), ஆப்பிரிக்கா (2), வட அமெரிக்கா (2), இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (2) மற்றும் ஓசியானியா (1) ஆகியவற்றிலிருந்தும் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.