ஈராக் பாராளுமன்றம் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான பர்ஹாம் சலிஹ் என்பவரை நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளது.
இவர் சலிஹ் புயாத் ஹூசைன் என்பவருக்கு எதிராகப் போட்டியிட்டார்.
ஈராக் அரசியலமைப்புச் சட்டத்தின்படி மொத்தமுள்ள 329 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஜனாதிபதியாக போட்டியிடுபவர் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு வாக்குகளை பெறவேண்டியது அவசியமாகும்.
பர்ஹாம் அகமது சலிஹ் 2001 முதல் 2004 வரை ஈராக்கின் மித சுயச் சார்புடைய குர்திஸ்தான் மாகாணத்தின் முன்னாள் பிரதமராவார்.
பிண்ணனி
2003 ஆம் ஆண்டு அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட அதிகாரப் பூர்வமில்லாத அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி தலைமை அரசாங்க பதவிகள் பெரும்பான்மை சமயப் பிரிவுகளிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஏற்றுக் கொள்ளப்பட்டது.