சுமார் 40 ஆண்டுகளில் முதல் முறையாக ஈராக் தனது விரிவான நாடு தழுவிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.
ஈராக் நாட்டில் கடைசியாக 1987 ஆம் ஆண்டில் நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1997 ஆம் ஆண்டில் நடைபெற்ற அதன் மற்றொரு கணக்கெடுப்பு ஆனது பகுதியளவு தன்னாட்சி கொண்ட குர்திஸ்தான் பிராந்தியத்தின் மூன்று வடக்கு மாகாணங்களைத் தவிர்த்து விட்டது.
ஈராக்கின் மக்கள் தொகையானது சுமார் 44.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.