TNPSC Thervupettagam

ஈரானின் அடுத்த அதிபர்

July 12 , 2024 6 days 88 0
  • 69 வயதான முன்னாள் இதய அறுவை சிகிச்சை நிபுணரான மசௌத் பெஷெஸ்கியான் ஈரான் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
  • அவர் குடிமையியல் உரிமைகள், அதிக பாலினச் சமத்துவம் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாடு, அத்துடன் சர்வதேச சமூகத்துடனான அதிக ஈடுபாடு ஆகியவற்றை வலியுறுத்துபவர் ஆவார்.
  • பொருளாதாரத் தடைகள் மற்றும் பல ஆண்டுகளாக மோசமான நிர்வாகத்தால் மோசமடைந்து வந்த ஈரான் அதிக பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை நிலைகளை எதிர்கொண்டுள்ளது.
  • ஈரான் 1979 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவத் தடைகளை எதிர் கொண்டுள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில், ஈரான் நாடானது P5+1 (அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, ரஷ்யா, பிரான்சு, சீனா மற்றும் ஜெர்மனி) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் "ஈரான் அணு சக்தி ஒப்பந்தம்" என்று அறியப்படும் ஒரு விரிவான கூட்டுச் செயல் திட்டத்தில் (JCPOA) கையெழுத்திட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்