69 வயதான முன்னாள் இதய அறுவை சிகிச்சை நிபுணரான மசௌத் பெஷெஸ்கியான் ஈரான் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் குடிமையியல் உரிமைகள், அதிக பாலினச் சமத்துவம் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாடு, அத்துடன் சர்வதேச சமூகத்துடனான அதிக ஈடுபாடு ஆகியவற்றை வலியுறுத்துபவர் ஆவார்.
பொருளாதாரத் தடைகள் மற்றும் பல ஆண்டுகளாக மோசமான நிர்வாகத்தால் மோசமடைந்து வந்த ஈரான் அதிக பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை நிலைகளை எதிர்கொண்டுள்ளது.
ஈரான் 1979 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவத் தடைகளை எதிர் கொண்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில், ஈரான் நாடானது P5+1 (அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, ரஷ்யா, பிரான்சு, சீனா மற்றும் ஜெர்மனி) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் "ஈரான் அணு சக்தி ஒப்பந்தம்" என்று அறியப்படும் ஒரு விரிவான கூட்டுச் செயல் திட்டத்தில் (JCPOA) கையெழுத்திட்டது.