TNPSC Thervupettagam

ஈரானின் அறநெறிக் காவல்துறை

December 13 , 2022 587 days 257 0
  • ஈரானின் தலைமை வழக்குரைஞர் முகமது ஜாபர் மொண்டசெரி, அங்கு ஏற்பட்ட பரவலான எதிர்ப்புகளை அடுத்து அந்த நாட்டின் அறநெறிக் காவல்துறையை இடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தார்.
  • ஈரானின் அறநெறிக் காவல்துறையானது, காஷ்ட்-இ-எர்ஷாத் (வழிகாட்டலுக்கான பணித் துறை) என்று அழைக்கப்படுகிறது.
  • இது "பணிவு மற்றும் பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் எனப்படும் தலையுறையினை அணிந்திருக்க வேண்டும் என்ற கலாச்சாரத்தைப் பரப்புவதற்காக" நிறுவப்பட்டது.
  • இத்துறையினர் 2006 ஆம் ஆண்டில் இதற்கான ரோந்துப் பணியைத் தொடங்கினர்.
  • ஈரான் சமூகத்தினரை ஆளும் இஸ்லாமியச் சட்டமான ஷரியா என்ற சட்டத்தின் கீழ், பெண்கள் தங்கள் தலைமுடியை மறைக்க வேண்டும் என்றும், மேலும் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு 1983 ஆம் ஆண்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்