TNPSC Thervupettagam

ஈரானின் முதல் உள்நாட்டு போர் விமானம் தயாரிப்பு

August 23 , 2018 2190 days 658 0
  • ஈரான் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு கௌசார் என பெயரிடப்பட்டுள்ள தனது முதல் போர் விமானத்தை அதன் தலைநகரமான டெஹ்ரானில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் வெளியிட்டுள்ளது.
  • இது 100% ஈரான் நாட்டிலேயே ஈரானால் தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட வான் பயண மின்னணுவியல் மற்றும் பல்நோக்கு ரேடார் பொருத்தப்பட்டட நான்காம் தலைமுறை போர் விமானமாகும்.
  • இதன் பெயரான கௌசார் இஸ்லாமின் சொர்க்கத்தில் உள்ள ஆற்றினைக் குறிப்பதாகும். மேலும் இது குரானின் ஒரு அத்தியாயத்தின் தலைப்பாகும்.
  • கடந்த சில வருடங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல போர் விமானங்களை ஈரான் வெளியிட்டுள்ளது. 2013ம் ஆண்டு அமெரிக்காவின் F-22 மற்றும் F-35 உடன் ஒப்பிடக்கூடிய ஹீவாஹர் – 313 என்ற உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானத்தை ஈரான் வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்