ஈரானின் மாபெரும் வான்வழித் தாக்குதல் ஈரான் நாட்டில் இருந்து இஸ்ரேலியப் பிரதேசத்தின் மீது ஈரான் நடத்திய முதல் நேரடித் தாக்குதலைக் குறிக்கிறது.
ஈரான் நாடானது இந்தத் தாக்குதலை ட்ரூ பிராமிஸ் என்று குறிப்பிடுகிறது.
ஈரானின் தாக்குதலில் 120க்கும் மேற்பட்ட உந்துவிசை ஏவுகணைகள், 170 ஆளில்லா விமானங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட சீர்வேக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன.
300க்கும் மேற்பட்ட எறிகணைகளில் “99%” எறிகணைகள் இடைமறித்து அழிக்கப் பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு கவச அமைப்பு என்பது குறுகிய தூர வரம்பு உடைய மற்றும் பீரங்கி குண்டுகளிலிருந்து நாட்டினைப் பாதுகாப்பதற்காக என்று வடிவமைக்கப் பட்டுள்ள அந்நாட்டின் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும்.
கப்பல்கள் மற்றும் கடல் சார்ந்தக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்காக கடல்வழிப் பாதுகாப்பிற்கான அயர்ன் டோம் என்ற பாதுகாப்பு கவச அமைப்பு 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
ரேடாரை (அலை உணர்வி) பயன்படுத்தி பிராந்தியத்திற்குள் நுழையும் ஏவுகணைகளைக் கண்டறிந்து, அவற்றின் பாதை மற்றும் வேகத்தை மதிப்பிட்டு தடுப்பதன் மூலம் இந்தப் பாதுகாப்பு கவச அமைப்பு செயல்படுகிறது.
இஸ்ரேலின் மற்ற பாதுகாப்பு அமைப்புகள்:
அயர்ன் டோம் பாதுகாப்பு கவச அமைப்பினை போலவே, டேவிட் ஸ்லிங் நடுத்தர தொலைவு வரம்புடைய எறிகணை இடைமறிப்பு அமைப்பு ஆனது ரஃபேல் எனப் படும் இஸ்ரேலிய நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டில் செயல் பாட்டுக்கு வந்தது.
ஆரோ 2 எனப்படும் மிக நீண்ட தொலைவு தாக்குதல் வரம்புடைய உந்துவிசை எறிகணைகளை அழிக்கும் நோக்கில் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு என்பது 2000 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது.
ஆரோ 3 எனப்படும் பாதுகாப்பு அமைப்பானது நீண்ட தொலைவு தாக்குதல் வரம்பு உடைய உந்துவிசை எறிகணைகள் விண்வெளியில் பறக்கும் போதே அவற்றைக் குறி வைத்து தாக்குகிறது.
1948 ஆம் ஆண்டில் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு, அந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் நாட்டினை அங்கீகரித்த முதல் நாடுகளில் ஈரானும் ஒன்றாகும்.
1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியில் ஷா பதவியிறக்கப்பட்ட பிறகு ஈரானில் ஒரு மதச் சார்பு அரசு நிறுவப்பட்டது.
அதன் பிறகு இஸ்ரேல் நாட்டின் மீதான ஒரு அணுகுமுறை மாறியது, எனினும் அது பாலஸ்தீனப் பகுதியினை ஆக்கிரமிக்கும் அரசாகவே கருதப்பட்டது.
1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு தான் அந்த நாட்டின் அரசுமுறை உறவுகள் முடிவுக்கு வந்தன.