TNPSC Thervupettagam

ஈரான் செயற்கைக்கோள் - தோல்வி

January 24 , 2019 2037 days 611 0
  • ஜனவரி 15 ஆம் தேதி சபிர் என்ற செயற்கைக் கோள் ஏவு வாகனத்தின் மூலம் "பயம்" என்று பெயரிடப்பட்ட செயற்கைக்கோளை ஈரான் ஏவியுள்ளது. ஆனால் புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சியின் நான்காவது நிலையில் இந்த செயற்கைக் கோள் தோல்வியடைந்தது.
  • ஈரானின் இந்த நடவடிக்கையானது ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானம் 2231-ஐ மீறி விட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
  • விண்வெளித் திட்டம் என்பது அணு ஆயுதப் போர் ஏவுகணைகளை வழங்கும் திறன் கொண்ட, அதிக தொலைவு சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வளர்ச்சிக்கான உள்ளடக்கம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன கூறியுள்ளது.
  • மேலும் ஈரான் மற்றொரு தாழ்மட்ட புவி சுற்றுவட்டப்பாதை செயற்கைக் கோளான தோஸ்தியை (நண்பர்) விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
  • ஈரானின் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக பயம் (பாரசீக மொழியில் தகவல் என்று பொருள்) மற்றும் தோஸ்தி ஆகிய இரு செயற்கைக் கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்