TNPSC Thervupettagam

ஈரான் – அணுசக்தித் திட்டம் தொடர்பான பிரச்சினை

January 23 , 2020 1676 days 649 0
  • ஐரோப்பிய நாடுகளானவை ஈரான் நாட்டின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பிரச்சினையை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றத்துக்கு அனுப்பினால், அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து (Nuclear Non-Proliferation Treaty - NPT) விலகப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
  • பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கடந்த வாரம் 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஈரான் கடைபிடிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டி ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்துள்ளன.
  • இந்த நடவடிக்கையின் காரணமாக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றமானது இறுதியில் ஈரானின் மீது சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை மீண்டும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அமையலாம்.
  • பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமான அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் ஈரான் இணைந்ததற்கு ஈடாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளிலிருந்து அதற்கு நிவாரணம் அளிக்கப் பட்டது.

NPT பற்றி

  • NPT என்பது அணு ஆயுதங்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தமானது 1968 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டு 1970 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • இந்த ஒப்பந்தமானது அணு ஆயுத நாடுகளை 1967 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் அணுகுண்டு போன்ற கருவிகளைத் தயாரித்துச் சோதித்த நாடுகள் என வரையறுக்கின்றது. மற்ற அனைத்து நாடுகளும் அணு ஆயுதமற்ற நாடுகளாகக் கருதப் படுகின்றன.
  • சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் அணு ஆயுத நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்