TNPSC Thervupettagam

ஈரோடு மஞ்சள் – புவிசார் குறியீடு

March 8 , 2019 1961 days 728 0
  • புவிசார் குறியீட்டுப் பதிவுத் துறையிடமிருந்து புவிசார் குறியீட்டை (Geographical Indication - GI) ஈரோடு மஞ்சள் பெற்றுள்ளது.
  • புவிசார் குறியீட்டைப் பெறுவதற்காக சென்னையில் உள்ள புவிசார் பதிவுத் துறையின் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் ஈரோட்டைச் சேர்ந்த மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் விண்ணப்பித்திருந்தனர்.
  • குறிப்பிட்ட புவிசார் குறியீடு என்பது பொருட்களின் புவியியல் இடம் அல்லது அது தோன்றிய இடத்தைக் குறிக்கும் குறிப்பிட்ட பொருட்களின் மீதான பெயர் அல்லது அடையாளமாகும்.
  • ஈரோடு மஞ்சள் என்பது ஈரோட்டைச் சேர்ந்த உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் ஒரு வேர்த் தண்டாகும்.
  • ஈரோடு மஞ்சளின் தனித்துவத்திற்கான உரிமைக் கோரலில், ஈரோடு மஞ்சள் தண்டின் சராசரி நீளம் 4.15 செ.மீ. ஆகவும் சராசரி சுற்றளவு 3.03 செ.மீ. ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்