TNPSC Thervupettagam
August 3 , 2021 1088 days 687 0
  • வரைகலை நிபுணர் ஆனந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு நகைச்சுவை தொழில்துறையின் வில் ஈஸ்னர் விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • நகைச்சுவை உலகில் இந்த விருதானது ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படுகிறது.
  • இந்த விருதானது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப் படுகிறது.
  • ராதாகிருஷ்ணன் வென்றுள்ள “சிறந்த ஓவியர்/பல்லூடக கலைஞர் (உள் அமைப்பு கலை)” விருதானது வரைகலை புனைக்கதையின் கலை மற்றும் வரைபடங்களை உருவாக்குபவருக்கு அங்கீகாரம் அளிக்கிறது.
  • ராதாகிருஷ்ணன் ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த வண்ணவியல் ஓவியர் ஜான் பியர்சனுடன் இந்த விருதினைப் பகிர்ந்து கொள்கிறார்.
  • ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த நூலாசிரியர் ராம் வி என்பவரின் 145 பக்க வரைகலை புதினப் புத்தகமான ‘Blue in Green’ எனும் புத்தகத்திற்கான அவர்களதுப் படைப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இப்புத்தகமானது இமேஜ் காமிக் எனும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்