வரைகலை நிபுணர் ஆனந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு நகைச்சுவை தொழில்துறையின் வில் ஈஸ்னர் விருதானது வழங்கப் பட்டுள்ளது.
நகைச்சுவை உலகில் இந்த விருதானது ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படுகிறது.
இந்த விருதானது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப் படுகிறது.
ராதாகிருஷ்ணன் வென்றுள்ள “சிறந்த ஓவியர்/பல்லூடக கலைஞர் (உள் அமைப்பு கலை)” விருதானது வரைகலை புனைக்கதையின் கலை மற்றும் வரைபடங்களை உருவாக்குபவருக்கு அங்கீகாரம் அளிக்கிறது.
ராதாகிருஷ்ணன் ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த வண்ணவியல் ஓவியர் ஜான் பியர்சனுடன் இந்த விருதினைப் பகிர்ந்து கொள்கிறார்.
ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த நூலாசிரியர் ராம் வி என்பவரின் 145 பக்க வரைகலை புதினப் புத்தகமான ‘Blue in Green’ எனும் புத்தகத்திற்கான அவர்களதுப் படைப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இப்புத்தகமானது இமேஜ் காமிக் எனும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.