TNPSC Thervupettagam

உக்ரைன் சந்திப்பு அறிக்கை

June 19 , 2024 12 days 106 0
  • சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட இறுதி ஆவணத்தை இந்தியா ஏற்க மறுத்துள்ளது.
  • சுவிட்சர்லாந்தில் பர்கென்ஸ்டாக் நகரில் வெளியிடப்பட்ட "சமாதானக் கட்டமைப்பின் மீதான கூட்டு அறிக்கைக்கு" ஒப்புதல் அளிப்பதற்கு மறுத்த சுமார் ஏழு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • உக்ரைனின் சமாதானக் கட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் தீர்மானங்கள் அடிப்படையில் வெகுவாக கட்டமைக்கப்பட்ட உக்ரைனின் "பிராந்திய ஒருமைப்பாட்டை" பாதுகாப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்ட இந்த அறிக்கையில், இதுவரை 80க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
  • சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, இந்தோனேஷியா, மெக்சிகோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்த இதர நாடுகளாகும்.
  • பிரேசில் ஒரு பார்வையாளர் நாடாக இதில் கலந்து கொண்டது என்ற நிலையில் இதில் பங்கேற்பதற்கான அழைப்பினைச் சீனா முற்றிலும் நிராகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்