உக்ரைன் போர் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பு
March 1 , 2023 637 days 308 0
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்களிக்கச் செய்வதிலிருந்து இந்தியா மீண்டும் விலகியுள்ளது.
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, 141 உறுப்பினர் நாடுகள் அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
7 நாடுகள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்த நிலையில், இந்தியா, சீனா, ஈரான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ரஷ்யா, பெலாரஸ், வடகொரியா, எரித்திரியா, மாலி, நிகரகுவா மற்றும் சிரியா ஆகிய ஏழு நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
அமெரிக்காவுடனான இந்தியாவின் பாதுகாப்பு வர்த்தகம் சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
ஆனால் இந்தியாவிற்குப் பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷ்யா திகழ்கிறது.