TNPSC Thervupettagam

உங்களது வாடிக்கையாளரை அறிந்து கொள்வதற்காக V - CIP

January 12 , 2020 1652 days 872 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது முதன்முறையாக ஆதாரை மையமாகக் கொண்ட காணொளி மூலம் வாடிக்கையாளர் அடையாளச் செயல்முறையை (Video Customer Identification Process - V-CIP) அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்த செயல்முறையானது வங்கிகளிலும் பிற கடன் வழங்குநர்களிடமும் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களின் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் - Know Your Customer) செயல்முறையைக் காணொளி மூலம் மேற்கொள்ள அனுமதிக்க இருக்கின்றது.
  • ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மின்னணு முறையிலான KYC வசதிக்கு மாற்றாக இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.
  • V-CIPஐ அறிமுகப்படுத்த, பணமோசடி தடுப்பு (பதிவுகளைப் பராமரித்தல்) விதிகள், 2005ன் கீழ் உள்ள வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்