உச்ச நீதிமன்ற நீதிபதி B.R. கவாய், உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுவானது 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டத்தின் 3A என்ற பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டது.
இது உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வழக்குகளில், "சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு இலவச மற்றும் திறம் மிக்க சட்ட சேவைகளை" வழங்கும்.
இந்தச் சட்டத்தின் 3A என்ற பிரிவு ஆனது, மத்திய ஆணையம் (தேசிய சட்ட சேவைகள் ஆணையம் அல்லது NALSA) ஆனது இக்குழுவை அமைக்க வேண்டும் என்று கூறுகிறது.
இக்குழுவானது, தற்போது பதவியில் இருக்கும் உச்சமன்ற நீதிபதியை அதன் தலைவராகக் கொண்டு, மத்திய அரசினால் பரிந்துரைக்கப்பட்ட அனுபவம் மற்றும் தகுதிகள் கொண்ட மற்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
தலைவர் மற்றும் மற்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்தியத் தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்படுவார்கள்.