உச்ச நீதிமன்றம் ஆனது ஒரே நாளில் 56 வழக்கறிஞர்கள் மற்றும் பதிவுரு வழக்கறிஞர்களை (AoR) மூத்த வழக்கறிஞர்களாக நியமித்துள்ளது.
இந்த 56 பேரில் 11 பெண்களும் 34 முதல் தலைமுறை வழக்கறிஞர்களும் அடங்குவர்.
உச்சநீதிமன்றம் ஆனது இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் உட்பட இதுவரை 14 பெண்களுக்கு மட்டுமே - மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இது தவிர, உச்ச நீதிமன்றத்தில் 198 புதிய பதிவுரு வழக்கறிஞர்கள் நியமிக்கப் பட்டு உள்ளனர்.
அரசியலமைப்பின் 145வது சட்டப் பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தினால் வகுக்கப்பட்ட விதிகளின்படி, பதிவுரு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும்.
உச்ச நீதிமன்றம் ஆனது ஆண்டிற்கு இரண்டு முறை பதிவுரு வழக்கறிஞர் தேர்வுகளை நடத்துகிறது.
உச்ச நீதிமன்றத்தினால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆவார்.