TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னம்

September 14 , 2024 73 days 132 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னத்தினை வெளியிட்டார்.
  • உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவை இந்த நிகழ்வானது நினைவு கூருகிறது.
  • நீல நிறத்திலான இந்தப் புதியக் கொடியானது அசோக சக்கரம், உச்ச நீதிமன்ற கட்டிடம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இந்தச் சின்னமானது தேவநகரி எழுத்து வடிவில் பொறிக்கப்பட்ட "யதோ தர்மஸ்ததோ ஜய" என்ற சொற்றொடரையும் கொண்டுள்ளது.
  • இது "எங்கே தர்மம் நிலை நாட்டப் படுகிறதோ, அங்கே வெற்றி இருக்கிறது" என்று பொருள் படுகிறது.
  • இந்தப் புதியக் கொடி மற்றும் சின்னம் ஆகியவை டெல்லியின் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கல்லூரியினால் (NIFT) கருத்துருவாக்கம் செய்யப்பட்டு வடிவமைக்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்