TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தின் 75வது ஆண்டு விழா

February 1 , 2024 170 days 369 0
  • இந்திய உச்ச நீதிமன்றமானது டெல்லியில் தனது வைர விழாவினை கொண்டாடியது.
  • இந்த நிகழ்வின் போது, எண்ணிம வழி உச்ச நீதிமன்ற அறிக்கைகள் (Digi SCR), எண்ணிம நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கான புதிய இருமொழி இணைய தளம் ஆகியவை தொடங்கப்பட்டன.
  • இணையவழி நீதிமன்றத் திட்டத்தின் கீழான எண்ணிம நீதிமன்றங்கள் 2.0 ஆனது, நிகழ்நேர நகலெடுப்பிற்காக செயற்கை நுண்ணறிவினை ஒருங்கிணைப்பதன் மூலம் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கு மின்னணு நீதிமன்றப் பதிவுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
  • 1950 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் உச்ச நீதிமன்றத்தில் பதிவான 36,308 வழக்குகளைக் கொண்டுள்ள எண்ணிம வழி உச்ச நீதிமன்ற அறிக்கைகள் எண்ணிம வடிவத்தில் பொதுமக்களுக்கு அணுகக் கூடிய வகையில் உள்ளது.
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் உச்ச நீதிமன்றம் நடைமுறைக்கு வந்தது.
  • இது ஆரம்பத்தில் 1937 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரையிலான 12 ஆண்டு காலத்திற்கு பழைய பாராளுமன்றக் கட்டிடத்தில் இந்தியக் கூட்டாட்சி நீதிமன்றமாக செயல்பட்டு வந்தது.
  • இது 1958 ஆம் ஆண்டில் புது டெல்லியில் உள்ள தற்போதைய கட்டிடத்திற்கு மாற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்