உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை திருத்த மசோதா – 2019
August 12 , 2019 2088 days 1059 0
இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லாமல் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 30லிருந்து 33 ஆக உயர்த்துவதற்கான மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டுள்ளார்.
நீதிபதிகளின் எண்ணிக்கையை 3 நபர் அல்லது 10 சதவீத அளவிற்கு உயர்த்தும் இந்த நடவடிக்கையானது உச்ச நீதிமன்றத்தில் 60,000 என்ற அளவில் அதிகரித்துள்ள வழக்குகளின் தேக்கத்தைப் பின்னணியாகக் கொண்டது.
இந்த மசோதாவானது முன்னதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டது.