இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டுப்பாடுகளை (Prompt corrective Actions – PCA) நீக்குவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த முடிவானது கடன் வழங்குவதற்குக் குறிப்பாக பெரு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதையும் கடன் வழங்கும் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்குமான அதிகச் சுதந்திரத்தினை வழங்குகிறது.
இந்த வங்கியின் அதிக நிகர செயல்பாட்டுச் சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் மீதான குறைவான வருமானம் ஆகியவற்றின் காரணமாக 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இது PCA கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
அது இந்த வங்கியின் நிலை மாறும் சொத்துக்கள் அதிகரிக்கப் படுவதிலிருந்துத் தடுக்கப் பட்டது.