அதிகப்படியான வாராக் கடன்களை கொண்டுள்ளதால், அலகாபாத் வங்கிக்கு எதிராக உடனடி சரிபார்ப்பு நடவடிக்கையை (Prompt corrective action) இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
தொடர்ந்து இரண்டாண்டுகளாக அலகாபாத் வங்கியில் அதிகப்படியான வாராக் கடன்களும் (NPA – Non Performing Assets) பற்றாக்குறையான பொது சமபங்கு முதல் அடுக்கு மூலதனமும் (Insufficient Common equity tier Capital – CET1), அதிகப்படியான சொத்துகள் மீதான எதிர்மறை வருவாயும் (Negative Return on Assets – ROA) உள்ளதால் அலகாபாத் வங்கிக்கு எதிராக உடனடி சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்படும் வாராக்கடன் மீட்பிற்கான சரிபார்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு சரிபார்ப்பு நடவடிக்கைகளை உரிய காலத்தில் உரிய முறையில் மேற்கொண்டு வங்கிகளின் நிதியியல் ஆரோக்கியத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு வங்கிகளுக்கு உதவிபுரிவதே உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பின் நோக்கமாகும்.