- மத்திய ரிசர்வ் வங்கியானது மோசமான செயல்பாடுகள் காரணமாக அரசுக்குச் சொந்தமான 21 பொதுத்துறை வங்கிகளை தன்னுடைய உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பின் (Prompt Corrective Action -PCA) கீழ் சேர்த்துள்ளது.
- PCA கட்டமைப்பின் கீழ் உள்ள 11 வங்கிகளாவன.
- IDBI வங்கி
- UCO வங்கி
- பேங்க் ஆஃப் இந்தியா
- சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
- இந்தியன் ஓவர்சிஸ் வங்கி
- தேனா வங்கி
- ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்
- மகாராஷ்டிரா வங்கி
- யூனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா
- கார்ப்பரேஷன் பேங்க் மற்றும்
- அலகாபாத் வங்கி
உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பு
- அதிகளவிலான வாராக் கடன்களையும் (Non-performing assets - NPA), பற்றாக்குறையான பொது சமபங்கு முதல் அடுக்கு மூலதனத்தையும் (common equity tier 1 capital -CET 1), சொத்துக்கள் மீதான எதிர்மறை வருவாயையும் (Negative Return On Assets-ROA) வங்கிகள் கொண்டிருந்தால் அவற்றை உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பின் (Prompt Corrective Action Framework) கீழ் இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வரும்.
- இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பின் கீழ், வங்கிகளின் நிகர வாராக்கடன் விகிதம் (Net NPA ratio) 6 சதவிகிதத்தை மீறி அதிகரித்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மீது சரிபார்ப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்திய ரிசர்வ் வங்கியின் முந்தைய உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பின் கீழ் வங்கிகளின் நிகர வாராக்கடன் விகிதம் 10 சதவிகிதத்தைத் தாண்டினால் மட்டுமே சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- இந்திய ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்படும் வாராக்கடன் மீட்பிற்கான சரிபார்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு சரிபார்ப்பு நடவடிக்கைகளை உரிய காலத்தில் உரிய முறையில் மேற்கொண்டு வங்கிகளின் நிதியியல் ஆரோக்கியத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வருவதற்கு வங்கிகளுக்கு உதவிபுரிவதே உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பின் நோக்கமாகும்.