குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்தவொரு உணவும் பெறாத குழந்தைகள் (உணவற்ற குழந்தைகள்) இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் (6.7 மில்லியன்) உள்ளனர்.
இது 92 நாடுகளில் உள்ள, குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்தவொரு உணவும் பெறாத குழந்தைகள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியளவாகும்.
நைஜீரியாவில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான உணவற்ற குழந்தைகள் (962 000) உள்ளனர்.
அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் (8,49,000), எத்தியோப்பியா (7,72,000), காங்கோ ஜனநாயகக் குடியரசு (3,62,000) ஆகியவை உள்ளன.
உணவற்ற குழந்தைகள் என்பது 6 முதல் 23 மாதங்களுக்கு இடைப்பட்ட வயதிலான குழந்தைகள், கடந்த 24 மணி நேரத்தில் பால், இதர அவசிய உணவு அல்லது எந்தவொரு உணவையும் உட்கொள்ளாத குழந்தைகள் ஆவர்.