2022 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் ஒரு நாளைக்கு சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான உணவை வீணாக்குகின்றன.
இந்த ஆண்டில் 783 மில்லியன் மக்கள் பட்டினி நிலையை எதிர்கொண்டனர் மற்றும் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர்.
2022 ஆம் ஆண்டில், சுமார் 1.05 பில்லியன் டன் உணவுக் கழிவுகள் அளவில் (உட்கொள்ள முடியாத உணவுகள் உட்பட) உருவாக்கப்பட்டன.
இது ஒரு நபருக்கு 132 கிலோகிராம் கழிவுகள் ஆகவும், நுகர்வோருக்கு கிடைக்கப் பெறும் அனைத்து உணவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஆகவும் உள்ளது.
2022 ஆம் ஆண்டில் வீணடிக்கப் படும் மொத்த உணவில், வீடுகளில் 60 சதவீதமும், உணவுச் சேவை நிறுவனங்களில் 28 சதவீதமும், சில்லறை விற்பனைகளில் 12 சதவீதமும் வீணடிக்கப் படுகின்றன.
உணவு வீணடிக்கப்படுதல் மற்றும் உணவுக்கழிவுகள் ஆனது, விமானத் துறையில் பதிவான உமிழ்வினை விட சுமார் 5 மடங்கு அதிகமாக, சுமார் 8 முதல் 10% வருடாந்திர உலகளாவியப் பசுமை இல்ல வாயு உமிழ்வினை ஏற்படுத்தியுள்ளன.