TNPSC Thervupettagam

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் ஆன்லைன் உணவு சோதனை மற்றும் மாதிரி எடுத்தல் திட்டம்

September 12 , 2017 2677 days 2077 0
  • உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் - Food Safety and Standards Authority of India (FSSAI)
  • உணவு சோதனை மற்றும் மாதிரி எடுத்தலில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர உணவுக் கட்டுப்பாட்டாளரான FSSAI இந்தியா முழுவதுமான FoSCoRIS (Food Safety Compliance Through Regular Inspections and Sampling) என்ற இணையதளத்தை ஆரம்பித்துள்ளது.
  • இந்த புதியமுறை உணவு வியாபாரிகள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிகள், மாநில உணவு பாதுகாப்பு ஆணையர்கள் ஆகிய முக்கிய பங்குதாரர்கள் அனைவரையும் மேலும் அதற்கு சம்பந்தமான ஆய்வுகள் தொடர்பான தகவல்கள், மாதிரி எடுத்தல் மற்றும் சோதனை முடிவுத் தகவல்கள் நாடு முழுவதுமுள்ள அனைத்து அலுவலர்களும் தடையின்றி அதனைப் பகிர்ந்துக் கொள்ள முடியும். இது தேசம் முழுவதுமான ஒருங்கிணைந்தத் தகவல் தொடர்பு தரவு தளத்தினைக் கொண்டுவரும்.
  • இந்த திட்டம் மாதிரிகள் சேகரித்தலை எளிமைப்படுத்தி அதனை வெளிப்படையாகவும் அதனை எளிதில் கண்டுபிடிக்கவும் உதவும். மேலும் அதன் தரம் தொடர்பானக் கட்டுப்பாடுகளையும் கட்டுப்படுத்த உதவும்.
  • இந்த திட்டம் FSSAI பற்றி மெய்நிகர் அடிப்படையில் ஒரு தெளிவான நிலையைக் கொடுக்கும். மேலும் ஆய்வுகளைப் பொறுப்பான முறையில் ஏற்படுத்திக் குறைகளை நிவர்த்தி செய்ய உதவும்.
  • இத்திட்டத்திற்காக , ஒவ்வொரு மாநிலத்திலும் FSSAI உடன் ஒருங்கிணைந்த மாநில உணவு அதிகாரக் குழுவிற்கு ஒரு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்