உணவுப் பிரச்சினை குறித்த வருடாந்திர உலக அறிக்கையின் ஒரு புதிய பதிப்பானது உணவுப் பிரச்சினைக்கு எதிரான உலகளாவிய அமைப்பினால் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது கோவிட் – 19 நோய்த் தொற்றுப் பிரச்சினையானது ஆபத்தில் இருக்கும் நாடுகளுக்கு புதிய இடர்களாக “உணவுப் பிரச்சினையை” ஏற்படுத்தும் என்று கூறுகின்றது.
இது 2016 ஆம் ஆண்டில் உலக மனிதாபிமான மாநாட்டின் போது ஐரோப்பிய ஒன்றியம், உணவு & வேளாண் அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றினால் இணைந்து தொடங்கப் பட்டுள்ளது.