TNPSC Thervupettagam

உணவுப் பொட்டலங்களுக்கான புதிய விதிகள் 2024

July 16 , 2024 134 days 158 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது 2020 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (முத்திரையிடல் மற்றும் விளம்பரப் படுத்துதல்) விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன்படி, ஊட்டச்சத்து விவரங்கள் தடிமனான எழுத்துக்களிலும், முன்பை விட சற்று பெரிய எழுத்துரு அளவிலும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
  • இது உணவுப் பொருட்களை வாங்கும் போது மக்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும்.
  • பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களின் முத்திரைகளில், உணவில் உள்ள மொத்த சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு போன்றவற்றின் அளவு குறித்த சில விவரங்கள் ஆனது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்