இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது 2020 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (முத்திரையிடல் மற்றும் விளம்பரப் படுத்துதல்) விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, ஊட்டச்சத்து விவரங்கள் தடிமனான எழுத்துக்களிலும், முன்பை விட சற்று பெரிய எழுத்துரு அளவிலும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இது உணவுப் பொருட்களை வாங்கும் போது மக்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும்.
பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களின் முத்திரைகளில், உணவில் உள்ள மொத்த சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு போன்றவற்றின் அளவு குறித்த சில விவரங்கள் ஆனது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.