TNPSC Thervupettagam

உணவுப் பொருட்களின் உறைகளில் தவறான தகவல்கள்

May 16 , 2024 64 days 143 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் விளக்க அட்டைகளில் உள்ள பல்வேறு தவறான தகவல்கள் தவறாக வழி நடத்துதலை வழங்குவதாக எச்சரித்துள்ளது.
  • சர்க்கரை உட்கூறு இல்லாத உணவுகளில் கொழுப்புகள் இருக்கலாம் அதே சமயம் பொதியாக்கப்பட்ட பழச்சாறுகளில் 10 சதவீதம் மட்டுமே பழ கூழ் இருக்கும்.
  • உணவுப் பொருளில் செயற்கை வண்ணமேற்றிகள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் அல்லது செயற்கைப் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாமல், குறைந்த அளவு பதப்படுத்துதல் செயல்முறைக்கு அவை உட்படுத்தப்பட்டிருந்தாலே அதை 'இயற்கை' உணவுப் பொருள் என்று அழைக்கலாம்.
  • 'ஊட்டச்சத்து குறித்த தகவல்கள்' மற்றும் 'ஊட்டச்சத்து அளவு /ஊட்டச்சத்து தகவல் கோரல்கள்’ ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை என்ற ஒரு பொதுவான தவறான கருத்து உள்ளது.
  • ஊட்டச்சத்து தகவல் குறித்த கோரல்கள் என்பது ஒரு உணவில் குறிப்பிட்ட ஊட்டச்சத்து பண்புகள் இருப்பதைத் தெரிவிக்கும் அல்லது குறிக்கும் எந்தவொரு அறிக்கையையும் குறிக்கிறது.
  • விளக்க அட்டையில் குறிப்பிடப்படும் அனைத்து ஊட்டச்சத்து தகவல்களும் குறிப்பிடப் பட்ட உட்கொள்ளல் அளவை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்