இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது, பார்வைத் திறன் குறைபாடுள்ள நபர்கள் எளிதில் அணுகக் கூடிய உணவுப் பொருட்களில் விரைவுக் குறியீட்டினைச் (QR) சேர்ப்பதற்குப் பரிந்துரைத்துள்ளது.
இந்த புதிய விரைவுக் குறியீடுகள் ஆனது தயாரிப்புப் பொருட்களின் இடுபொருட்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல், ஒவ்வாமை காரணிகள், உற்பத்தி தேதி, முன் பயன்பாட்டு தேதி /காலாவதி/இறுதி பயன்படுத்துதல், ஒவ்வாமை எச்சரிக்கை மற்றும் வாடிக்கையாளர் விசாரணைகளுக்கான தொடர்பு தகவல் உள்ளிட்ட பல விரிவான விவரங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ஒரு வகை இரு பரிமாண அணிக்கோவை பட்டைக் குறியீடான QR குறியீடு என்பது 1994 ஆம் ஆண்டில் வாகனப் பாகங்களை முத்திரையிடுவதற்காக என்று டென்சோ வேவ் எனப்படும் ஜப்பானிய நிறுவனத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது.
பல்வேறு அறிக்கைகளின்படி, அமெரிக்கா, இந்தியா, பிரான்சு மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை QR குறியீட்டை அதிகம் பயன்படுத்துகின்றன.