TNPSC Thervupettagam

உணவுமுறையின் பன்முகத் தன்மையில் பெருவனத்தில் விளையும் உணவுப் பொருட்களின் பங்கு

July 1 , 2023 384 days 282 0
  • ‘இந்தியாவில் பெண்களின் உணவுமுறையில் உள்ள அதிக பன்முகத் தன்மைக்குப் பெரு வனத்தில் விளையும் உணவுப் பொருட்கள் அதிகம் பங்களிக்கின்றன’ என்ற தலைப்பில் அமைந்த ஆய்வறிக்கையானது நேச்சர் ஃபுட் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் பெண்களின் உணவு முறையில் வனங்கள் மற்றும் பொது நிலங்களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களின் பங்கினைக் குறித்து இந்த அறிக்கையானது எடுத்துரைக்கிறது.
  • வனத்தில் விளையும் உணவுப் பொருட்களின் நுகர்வானது, பெண்களின் உணவில் குறிப்பாக ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினைக் கொண்டுள்ளது.
  • பெரு வனத்தில் விளையும் உணவுப் பொருட்களை உட்கொள்ளாத பெண்களை விட, பெரு வனத்தில் விளையும் உணவுப் பொருட்களை உட்கொள்ளும் பெண்களின் சராசரி உணவுப் பன்முகத் தன்மையானது அதிகமாகும்.
  • இந்த ஆய்வில் இடம் பெற்ற பெண்களில் 40 சதவீதத்தினர், ஓராண்டு காலத்தில் குறைந்த பட்ச உணவுப் பன்முகத் தன்மையை எட்டவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்