TNPSC Thervupettagam

உணவு இறக்குமதி நிராகரிப்பு எச்சரிக்கைக்கான இணைய தளம்

September 28 , 2024 58 days 70 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது உணவு இறக்குமதி நிராகரிப்பு எச்சரிக்கை (FIRA) என்ற இயங்கலை இயங்கு தளத்தினை உருவாக்கி உள்ளது.
  • இந்திய எல்லைகளில் உணவு இறக்குமதி நிராகரிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிப்பதை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மோசமானப் பாதுகாப்புத் தரங்கள் காரணமாக இந்திய அரசினால் நிராகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்து இது எச்சரிக்கைகளை உருவாக்கும்.
  • நிராகரிக்கப்பட்ட உணவினால் ஏற்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் உடல்நல அபாயங்கள் குறித்து உலகெங்கிலும் உள்ள அதிகாரிகளிடையே விரைவான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு இந்த இணைய தளம் வழிவகுக்கும்.
  • சமீபத்தில் FSSAI ஆனது இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,500 உணவுப் பொருட்களை நிராகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்