TNPSC Thervupettagam

உணவு இழப்பு மற்றும் வீணாதல் பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம் - செப்டம்பர் 29

September 30 , 2023 327 days 119 0
  • உணவு இழப்பு மற்றும் வீணாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்குமான ஒரு வாய்ப்பாக இது கருதப்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உணவு இழப்பு மற்றும் வீணாதலை குறைத்தல்: உணவு முறைகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளச் செய்தல்" என்பதாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கூற்றுப்படி, ஆண்டு தோறும் 1.3 பில்லியன் டன் உணவு வீணடிக்கப் படுவதால் உலகிற்கு 750 பில்லியன் டாலர்கள் இழப்பாகிறது.
  • மொத்த உணவுக் கழிவுகளில் 61 சதவீதம் வீடுகளில் இருந்தும், 26 சதவீதம் உணவு சேவை வழங்கீட்டு அமைப்புகளிலிருந்தும், 13 சதவீதம் சில்லறை விற்பனையில் இருந்தும் வெளியாகின்றன.
  • உலகளவில், உணவுக் கழிவுகள் ஆனது உலகளாவியப் பசுமை இல்ல வாயு உமிழ்வில் சுமார் 20 சதவிகித பங்கினைக் கொண்டுள்ளன.
  • இது மனிதனால் வெளியிடப்படும் மொத்த வாயு வெளியேற்றத்தில் மூன்றில் ஒரு பங்காகும்.
  • உணவு வீணடிக்கப்படுவதில் இந்தியாவின் பங்களிப்பு, ஆண்டுதோறும் 68.8 மில்லியன் டன்கள் அதாவது உலகளாவிய உணவு வீணாதலில் 7 சதவீதம் ஆகும்.
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் சுமார் 40 சதவீதம் வரை வீணடிக்கப் படுகிற நிலையில், அதாவது 50000 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுகள் வீணடிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்