உணவு தானிய உற்பத்தியில் நிறைவுற்ற நிலை
May 2 , 2022
942 days
587
- முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2021-22 ஆம் ஆண்டில் தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி 9% அதிகமாக பதிவாகியுள்ளது.
- இது தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி நிறைவுற்ற ஒரு நிலையை அடைந்ததைக் காட்டுகிறது.
- தமிழகத்தில், 2011-12 ஆம் ஆண்டில் இருந்து சராசரியாக ஆண்டுக்கு 100 லட்சம் டன்கள் உணவு தானிய உற்பத்தி பதிவாகியுள்ளது.
- 2014-15 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 127.95 லட்சம் டன்கள் உற்பத்தியும், கடந்த ஆண்டில் சுமார் 118 லட்சம் டன்கள் உற்பத்தியும் பதிவாகியுள்ளது.
- 2022-23 ஆம் ஆண்டிற்கான இலக்காக சுமார் 126 லட்சம் டன்களாக நிர்ணயிக்கப் பட்டு உள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.
Post Views:
587