ஐநா சபையின் உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் 1945ல் நிறுவப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
2017ம் ஆண்டிற்கான கருத்துரு “இடப்பெயர்வின் எதிர்காலத்தை மாற்று ; உணவு பாதுகாப்பிலும் ஊரக மேம்பாட்டிலும் முதலீடு செய்”.
உலக உணவு தினம் 1979ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், உணவு மற்றும் விவசாய அமைப்பின் உறுப்பினர்களுக்கான 20வது பொது மாநாட்டில், வறுமை மற்றும் பசி ஆகியவற்றின் மீது உறுப்பு நாடுகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
உணவுமற்றும்வேளாண்மைநிறுவனம்
வேளாண்மை உற்பத்தியினை பெருக்கி அதன் மூலம் பட்டினியை ஒழித்தல்,வாழ்க்கைத் தரம் மற்றும் ஊட்டச்சத்தை அதிகரித்தல் போன்றவற்றிற்கான சர்வதேச முயற்சிகளை வழிநடத்தும் ஐ.நா.வினுடைய ஓர் சிறப்பு நிறுவனமே உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமாகும்.
தோற்றம்
அக்டோபர் 16, 1945
தலைமையகம்
ரோம், இத்தாலி,
உறுப்பினர்கள் எண்ணிக்கை
194 (ஐரோப்பிய யூனியன் சேர்த்து).
கொள்கை
எல்லோருக்கும் உணவு ( Let There be Bread)
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை( ECOSOC -United Nations Economic And Social Council) இதன் தாய் நிறுவனமாகும்.