சமூக ஊட்டச்சத்து திட்டங்களின் செயல்பாட்டிற்கான தொழில்நுட்ப மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதற்குப் பொறுப்பு கொண்டுள்ள இந்த வாரியமானது, அரசாங்க அமைப்புகளை திறன்மிக்கதாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக "அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது".
உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் ஆனது மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினால் மூடப்பட்டது.
இது டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாகும்.
நான்கு பிராந்திய அலுவலகங்கள் மற்றும் ஃபரிதாபாத், மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள பல தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் உட்பட பலவிதமான அலுவலக வலையமைப்புகளை இந்த வாரியம் கொண்டிருந்தது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் ஆனது, முதலில் வேளாண் அமைச்சகத்தின் கீழ் நிறுவப் பட்டது ஆனால் பின்னர் 1993 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அது மாற்றப்பட்டது.