TNPSC Thervupettagam

உணவு மற்றும் வேளாண்மை நிலை அறிக்கை 2023

November 16 , 2023 246 days 264 0
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது, ‘2023 ஆம் ஆண்டு உணவு மற்றும் வேளாண்மை நிலை’ என்ற புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், 2.4 பில்லியன் மக்கள் அதாவது உலக மக்கள்தொகையில் சுமார் 29.6% பேர் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர் கொண்டுள்ளனர்.
  • அவர்களில், சுமார் 900 மில்லியன் பேர் (உலக மக்கள் தொகையில் 11.3%) கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர்.
  • ஒன்பது தெற்காசிய நாடுகளில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்த படியாக, மொத்த மக்கள்தொகையில் அதிக ஊட்டச்சத்து குறைபாடு (233.9 மில்லியன்) கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.
  • மிகப் பெரிய மறைமுக செலவினங்கள் (70 சதவிகிதத்திற்கும் அதிகமானவை) ஆரோக்கியமற்ற உணவுகள், அதிகளவு-பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் அதிகம் உள்ள உணவுகளால் ஏற்படுகின்றன.
  • இந்தச் செலவினங்கள் ஆண்டிற்கு 7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி, பெரிய அளவிலான விளைவினை ஏற்படுத்துகிறது.
  • மறைமுகச் செலவினங்களில் பெரும்பாலானவை உயர்-நடுத்தர வருமானம் (39%) மற்றும் உயர் வருமானம் உள்ள நாடுகளில் 36% ஆகவும், குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 22% ஆகவும் மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 3% ஆகவும் உருவாக்கப்பட்டுள்ளன.
  • வேளாண் உணவு முறைகளில் இந்தியாவின் மொத்த மறைமுகச் செலவினங்கள் தோராயமாக 1.1 டிரில்லியன் டாலர் ஆக உள்ளதையடுத்து, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • நோய்ப் பாதிப்புகளின் சுமையானது, (உணவு முறைகளால் ஏற்பட்ட உற்பத்தி இழப்புகள்) இந்தியாவில் பதிவான மறைமுகச் செலவினங்களில் மிகப்பெரிய பங்கை  (60%) கொண்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து வறுமையால் ஏற்படும் சமூகச் செலவுகள் (14%) மற்றும் நைட்ரஜன் உமிழ்வுகள் (13%) மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் செலவுகள் ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்