அரசுகளுக்கிடையேயான ஒரு தொழில்நுட்ப பணிக்குழுவானது, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்களை மதிப்பாய்வு செய்து, முக்கிய முடிவுகளில் அந்த அமைப்பிற்குத் தேவையான ஆலோசனை வழங்குகிறது.
இந்தக் குழுவின் 12வது அமர்வில் இந்தியா இந்த அமைப்பின் துணைத் தலைமைப் பொறுப்பினை ஏற்க உள்ளது.
அரசுகளுக்கிடையேயான தொழில்நுட்பப் பணிக்குழுவின் கூட்டமானது, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரோம் நகரில் நடைபெற உள்ள நிலையில், இதில் விலங்குகளின் மரபணு வளங்களைப் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
இந்த அமர்விற்கு அமெரிக்கா தலைமை தாங்க உள்ளது.
இந்தியாவுடன் சேர்ந்து மற்ற சில நாடுகளும் துணைத் தலைமைப் பதவியை வகிக்க உள்ளன.
அவை ஸ்பெயின், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, டோங்கா மற்றும் பிரேசில் ஆகியனவாகும்.
துணைத் தலைமை பதவியுடன் சேர்த்து, அறிக்கை வழங்கீட்டு நாடு பதவியையும் இந்தியா வகிக்க உள்ளது.
அறிக்கை வழங்கீட்டு நாடு என்றால் அமைப்பு குறித்த அறிக்கையினை வெளியிடும் நாடாகும்.