TNPSC Thervupettagam

உணவு முறை மாற்றத்தின் பொருளாதாரம் அறிக்கை

February 11 , 2024 287 days 330 0
  • உணவு முறை பொருளாதார ஆணையம் ஆனது உணவு முறை மாற்றத்தின் பொருளாதாரம் என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • ஆண்டிற்கு 500 பில்லியன் டாலர் செலவின மதிப்பீட்டில், தற்போதுள்ள உணவு முறைகளில் ஒரு நிலையான மாற்றம் மேற்கொள்வதற்கான அவசரத் தேவை உள்ளது.
  • இந்தச் செலவினமானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2–0.4 சதவீதத்திற்குச் சமமாகும் என்பதோடு அதனால ஏற்படக்கூடிய பல டிரில்லியன் டாலர் மதிப்பிலான பலன்களுடன் ஒப்பிடுகையில் இது மிகச்சிறியது.
  • தற்போதைய உணவு முறைகளின் வருடாந்திர சுற்றுச்சூழல் செலவினம் 3 டிரில்லியன் டாலர் ஆகும் என்பதோடு, மேலும் ஆரோக்கியத்திற்கான கூடுதல் செலவினங்கள் குறைந்தது 11 டிரில்லியன் டாலர் ஆகும்.
  • தற்போதைய செலவினப் போக்குகளானது 2050 ஆம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பின்மை நிலையானது உலகின் சில பகுதிகளில் மேலும் 121 மில்லியன் குழந்தைகள் உட்பட 640 மில்லியன் மக்களை உயரத்திற்கு ஏற்ற எடையற்ற நிலைக்குத் தள்ளும் என்பதோடு, அதே சமயம் உலகளவில் உடல் பருமன் 70 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறுகிறது.
  • உணவு முறை மாற்றமானது உணவு தொடர்பான நோய்களின் விகிதங்களைக் குறைப்பதன் மூலம் 2020 ஆம் ஆண்டில் மோசமான உணவுப்பழக்கத்தால் ஆண்டிற்கு 12 மில்லியன் ஆகப் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கையினை 2050 ஆம் ஆண்டில் 7.7 மில்லியனாக குறைக்கக்கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்