உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உணவு விலைக் குறியீடு (FFPI) என்பது ஒரு சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களின் சர்வதேச விலைகளில் ஏற்படும் மாதாந்திர மாற்றத்தின் ஒரு மதிப்பீடு ஆகும்.
இந்த அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் உலக உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிலான உச்சத்தை எட்டியது.
இது 2021 ஆம் ஆண்டில் பதிவானதை விட 14.3% அதிகமாக உள்ளதைக் குறிப்பதோடு இது 1990 ஆம் ஆண்டில் இதற்கான பதிவுகள் தொடங்கியதிலிருந்து இதுவரை பதிவான மிக அதிக அளவிலான உயர்வாகும்.