சமீபத்தில் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது இந்தக் குறியீட்டை வெளியிட்டு உள்ளது.
இது தொடர்ந்து 7வது மாதமாக 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் உயர்ந்துள்ளது.
இது தானியங்கள், பால் பொருட்கள், என்ணெய் வித்துக்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் சர்வதேச விலைகளில் ஏற்படும் மாதாந்திர மாற்றங்களை அளவிடுகின்றது.
2020 ஆம் ஆண்டில், உணவு விலைக் குறியீடானது 97.9 புள்ளியாக உள்ளது.
இது மூன்று ஆண்டு காலத்தில் மிகவும் அதிகமாகும், இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடப் படும் போது 3.1% ஆக அதிகரித்துள்ளது.
உணவு விலைக் குறியீட்டின் மிக அதிகபட்ச உயர்வானது 2011 ஆம் ஆண்டில் நிகழ்ந்து உள்ளது.