TNPSC Thervupettagam

உணவு வீணடித்தல் மற்றும் கழிவுகள் பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம் - செப்டம்பர் 29

October 1 , 2022 694 days 242 0
  • இந்த தினம் அனுசரிக்கப்படுவதால் உணவு வீணடித்தல் மற்றும் உணவுக் கழிவுகளை குறைத்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளிக்கும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்தத் தினத்தினை அங்கீகரித்து உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து அமைப்பு (FAO) மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) ஆகியவை இந்தத் தினத்தை அனுசரிப்பதற்காக ஒன்றிணைந்துள்ளன.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'மக்கள் மற்றும் கிரகத்திற்காக உணவுகளை வீணடித்தல் மற்றும் கழிவுகளை நிறுத்துங்கள்’ என்பதாகும்.
  • உலகின் 14 சதவீத உணவானது அறுவடைக்கும் சில்லறை விற்பனைக்கும் இடைப் பட்ட செயல்முறைகளில் இழக்கப் படுகிறது.
  • சில்லறை விற்பனையிலும் நுகர்வு அளவிலும் 17 சதவீத உணவு வீணடிக்கப்படுகிறது.
  • இந்த உணவு வீணடித்தல் மற்றும் கழிவுகள் ஆனது மொத்த உலகளாவியப் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 8-10 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்