TNPSC Thervupettagam

உண்மை நேர அளவில் சுனாமி ஆழிப் பேரலைகளின் மூழ்கடிப்பு

December 27 , 2017 2397 days 721 0
  • உண்மை நேர அளவில் (real time), சுனாமி ஆழிப் பேரலைகளினால் ஏற்படுத்தப்படும் மூழ்கடிப்பின் விஸ்தீரன அளவை (extent of inundation) முன்கணித்த முதல் நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.
  • ஹைதராபாத்தில் உள்ள பெருங்கடல் தகவலியல் அறிவியலுக்கான இந்திய தேசிய மையத்தில் (Indian National Centre for Ocean information Sciences), இந்திய சுனாமி ஆழிப் பேரலைகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை மையம் (Indian Tsunami early warning centre-ITEWC) தொடங்கப்பட்ட பிறகு ஏற்படுத்தப்பட்ட முதல் முக்கியமான மைல்கல் இதுவே ஆகும்.
  • பெருங்கடல் தகவலியல் அறிவியலுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் தன்னதிகார சுயாட்சி (Autonomous) அமைப்பாகும்.
  • தற்போது நடப்பில், ITEWC மையமானது சுனாமி ஆழிப்பேரலைகள் கடற்கரைகளைத் தாக்கவல்ல சாத்திய நேரத்தையும், அவற்றின் சாத்தியமான உயரத்தையும் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
  • தற்போது தொழிற்நுட்ப ரீதியாக இம்மையம் மேம்படுத்தப்பட்டுள்ளதால், சுனாமி ஆழிப் பேரலைகளினால் உண்டாக்கப்படும் மூழ்கடிப்பின் விஸ்தீரனத்தையும், அதன் அளவையும் (Extent and level) முன்கணிப்பின் வழியாக இம்மையத்தினால் முன்கூட்டியே கூற இயலும்.
  • ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியப் பெருங்கடலின் கரை நாடுகள் (Indian Ocean Rim Countries) போன்ற அனைத்து இந்தியப் பெருங்கடலியல் நாடுகளுக்கும் இது பெரும் உதவியாக அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்