இந்தியப் பெருங்கடலில் உள்ள 10 கரையோர நாடுகளுடன் இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் கடல்வழிப் போக்குவரத்தின் புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்தியா வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆளுகையை அதிகரித்து வருவதற்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் சமயத்தில், இந்த அறிவிப்பை கோவாவில் நடைபெற்ற கடல்வழி கூட்டத்தில் தலைமை கடற்படைத் தளபதி சுனில் லம்பா அறிவித்தார்.
கோவா கடல்வழி மாநாடு கோவாவில் உள்ள INS மாண்டோவியின் தரங் அரங்கத்தில் தொடங்கப்பட்டது.
பிராந்திய கடல் வழிக்கான சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் பின்வரும் விஷயங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டன,
புதிதாக எழும் கடல்வழி ஆபத்துகள் மற்றும் படை அமைப்புகள்
கடல் வழி பகுதி விழிப்புணர்வு
கடல்வழிப் பாதுகாப்பு கட்டமைப்பு
இந்தியப் பெருங்கடலில் கடல்வழிப் பாதுகாப்பிற்கான சவால்கள்
தற்போது பகிரப்பட உள்ள தகவல்களில் வர்த்தகப் போக்குவரத்தோடு புலனாய்வுத் தகவல்களும் அடங்கும்.
இம்மாதிரியான தகவல் பகிர்வு வழக்கமான இராணுவக் காரணங்களுக்கான பயிற்சி மட்டுமன்று. கடற்பகுதியில் அதிகரித்து வரும் மரபு சாரா ஆபத்துக்களை சமாளிப்பதற்காகவும் ஆகும்.