TNPSC Thervupettagam
May 23 , 2019 1894 days 644 0
  • ஜப்பானின் இரண்டாவது உயரிய தேசிய விருதான “உதயமாகும் சூரியன், தங்கம் மற்றும் வெள்ளி நட்சத்திரம் ஆகியவற்றின் ஆணை” என்ற விருதுக்கு முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளரான ஷியாம் சரண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்த விருது ஜப்பானைச் சேர்ந்த அரசரான மெய்ஜி என்பவரால் 1875 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • இது இராணுவப் பணி மற்றும் பொதுப் பணியில் சிறப்பாக விளங்கியதற்காக வழங்கப்படுகின்றது.
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே பரஸ்பர உறவுகளை மேம்படுத்தியதற்காகவும் யுக்திசார் உறவுகளை வலுப்படுத்தியதில் இவரின் பங்களிப்பிற்காகவும் இவர் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட விருக்கின்றார்.
  • இவர் 2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பணியாற்றினார்.
  • இந்தக் காலகட்டத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையேயான உறவை “யுக்திசார் பங்காளர்” என்ற நிலைக்கு உயர்த்துவதற்கு இவர் மிக முக்கியப் பங்காற்றினார்.
  • 1988 ஆம் ஆண்டில் ஜப்பானில் நடத்தப்பட்ட “இந்தியத் திருவிழா” என்பது இவரது பங்களிப்புகளில் உள்ளடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்