இது 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று பீகார், வங்காளம், ஒடிசா ஆகிய மாகாணங்களிலிருந்து ஒரு தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு அதோடு மதராஸ் மாகாணத்தின் கோராபுட் மற்றும் கஞ்ஜம் ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டு ஒடிசா மாநிலமாக உருவாக்கப் பட்டதை நினைவு கூர்கின்றது.
2010 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று, இந்தியப் பாராளுமன்றமானது ஒரிசாவை ஒடிசா எனவும் ஒரியா மொழியை ஒடியா எனவும் பெயர் மாற்றம் செய்தது.
பண்டைய காலத்தின் போது இருந்த கலிங்கப் பேரரசிற்காக வரலாற்றில் இது வெகு சிறப்பாக அறியப்படுகின்றது.
கி.மு. 250ல், இது அசோகரால் கைப்பற்றப்பட்டது. இதன் விளைவாக இந்த மாநிலம் மௌரியப் பேரரசு ஆட்சியின் கீழ் ஒரு நூற்றாண்டு காலம் செழிப்புடன் ஆளப்பட்டது.