மதுரை மாவட்டம் பேரையூர் தாலுக்காவின் உத்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாளம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோவிலைத் திறக்க என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக (சாதி சார்ந்த) மோதலால் 10 ஆண்டுகளாக அக்கோவில் மூடப்பட்டிருந்தது.
கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிலையை உயிருள்ள ஒன்றாகக் கருதப்பட வேண்டும் என்றும், வழக்கப்படி பூஜைகள் செய்யாமல் கோயிலை மூடுவது அதற்கு வழங்கப் படும் சிறைத் தண்டனைக்குச் சமம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
சட்டத்தின்படி ஒரு சிலை என்பது நீதித் துறையின் கீழ் ஒரு தனிநபராக கருதப் படுகிறது.
இது அந்தச் சிலையானது சொத்துக்களைக் கொண்டிருக்கவும் அதன் பெயரில் வழக்கு தொடுக்கவும் அந்தச் சிலையே வழக்கு தொடரவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு என்ற காரணங்களுக்காக எந்த கோவிலையும் பூட்டி விடவோ அல்லது அதன் செயல்பாட்டைத் தடை செய்யவோ முடியாது.
எந்த ஒரு கோவிலும் ஒரு தெய்வத்தின் வீடாகும்.
இங்கே என்ன கேள்வி என்றால் பொது ஒழுங்கைக் காரணம் காட்டி ஒரு கோவிலை மூட வைக்க முடியுமா என்பது தான்.
தீண்டாமை என்ற பிரச்சினை எதுவும் இல்லாத போதோ இல்லை மற்றவர்களின் உரிமைகளைப் பாதிக்கின்ற விஷயம் எதுவும் இல்லாத வகையிலோ ஒரு கோவிலை கால நிர்ணயம் எதுவும் இன்றி மூடி வைக்கவோ அல்லது பூட்டி வைக்கவோ கூடாது.
ஒரு பக்தன் தன்னுடைய வழிபாட்டினை மேற்கொள்ளும் உரிமை என்ற வகையிலும் மரபார்ந்தச் சடங்குகளை அனுசரிப்பது ஒரு தெய்வத்தின் உரிமை என்ற வகையிலும் இது முக்கியமானதாகும்.
எப்பொழுது 18 வயதுக்கு உட்பட்டவர்களின் நலன், மனநலம் சரியில்லாதவர்கள் மற்றும் தெய்வச் சிலைகள் ஆகியோரது உரிமைகள் பாதிப்பிற்குள்ளாகிறதோ நீதிமன்றம் அப்போது தாய் நாட்டின் அதிகார வரம்பு மீதான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பின் கீழ் உறுதியளிக்கப் பட்ட வகையில் ஒரு மனுதாரரின் அடிப்படை உரிமையான ஒரு கோவிலுக்குச் செல்வது என்பதையோ அல்லது தெய்வத்திற்கான வழிபாட்டின் நடைமுறையில் பங்கெடுப்பதையோ எக்காரணத்தைக் கொண்டும் பறித்து விடக் கூடாது.