உத்தரகாண்டின் ரூப்குண்ட் ஏரி
October 22 , 2024
31 days
89
- உத்தரகாண்டின் மலையேற்றத் தலமாக விளங்கும் ரூப்குண்ட் ஏரி, திரிசூல் மலையின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 16,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
- 9 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியின் பரவல் தோராயமாக இரண்டு ஏக்கர் ஆகும்.
- நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகளைக் கொண்டுள்ள பெரும் பனிப்பாறை மிக்க இந்தப் பகுதியானது "எலும்புக்கூடுகளின் ஏரி" என்று அழைக்கப்படுகிறது.
- இந்த ஏரியானது தற்போது அகலம் மற்றும் ஆழம் ஆகிய இரண்டிலும் ஆண்டுதோறும் சுமார் 0.1% முதல் 0.5% வரை சுருங்கி வருகிறது.
Post Views:
89